Showing posts with label Forwarded Mails. Show all posts
Showing posts with label Forwarded Mails. Show all posts

Thursday, April 05, 2007

Jokes

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

************ ********* ********* ********* ********* *


சொன்னார்கள்

"சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி."

- ஜவஹர்லால் நேரு.

"நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்."

-Gandhi

************ ********* ********* ********* **


வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

************ ********* ********* *

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன் . ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?


பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும் !

பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?

வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே ...


************ ********* ********* ********* ********* ********

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா ?

பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.

வடிவேல் : ?!?!

************ ********* ********* ******


அண்ணே...

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.

ஆனா,

கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

************ ********* ********* ********* ***

விழிப்போம் என்ற நம்பிக்கையில் தூங்குவதைவிட,

நாளைக்காவது குளிப்போம் என்ற லட்சியத்தோடு தூங்கு!!!


*********** ********* ********* ********

நாம 21 ஐ "டுவென்டி ஒன்" னு சொல்றோம்.

31ஐ " தேர்ட்டி ஒன்"னு சொல்றோம்.

41ஐ " ஃபார்டி ஒன்"னு சொல்றோம்.

அப்ப ஏன்,

11ஐ மட்டும் " ஒன்ட்டி ஒன்" னு சொல்லக் கூடாது?


************ ********* ********* ********* *****

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!





இப்படிக்கு ,


ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.